பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன்: மன்மோகன்சிங் பரபரப்பு பேட்டி
பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 10 ஆண்டுகளில் 2004 மற்றும் 2010–ம் ஆண்டுகளில் இரண்டு தடவை மட்டுமே நிருபர்களுக்கு பேட்டியளித்திருந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) மூன்றாவது முறையாக அவர் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பத்திரிகையாளர்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க முடிவு செய்தது, நாடெங்கும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று கூறப்பட்டது. இதனால் இன்று டெல்லியில் பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிருபர்கள் திரண்டனர். சரியாக 11 மணிக்கு பேட்டி தொடங்கியது.
முதலில் பிரதமர் மன்மோகன்சிங், தான் தயாரித்து எடுத்து வந்திருந்த அறிக்கையை நிருபர்களிடம் வாசித்தார். அதில் அவர் தன் கடந்த 10 ஆண்டு கால ஆட்சி சாதனைகளைப் பட்டியலிட்டார். அவர் கூறியதாவது:–
கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளோம். நாட்டு மக்களுக்கு நல்ல எதிர் காலத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். சட்டசபை தேர்தல் தோல்வி மூலம் சரியான பாடம் கற்றுக் கொண்டோம். தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம்.
ஜனநாயக ஆட்சியில் தனிப்பட்ட நபரோ அல்லது தனி அமைப்போ வளர்ச்சி குறைவுக்கு பொறுப்பு ஏற்க முடியாது. நாட்டு மக்களுக்காக நாங்கள் பாராளுமன்ற நடைமுறையை மீறி பல முக்கிய சட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் 2ஜி ஊழல் உள்பட பல ஊழல் புகார்கள் கூறப்பட்ட போதிலும் நாட்டு மக்கள் அதை நம்பாமல் எங்களுக்கு இரண்டாவது தடவை ஆட்சி நடத்த வாய்ப்பு கொடுத்தார்கள். வரலாறு எழுதப்படும் போது நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து வெளியில் வருவோம். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் விலைவாசி உயர்வே காங்கிரசின் தோல்விக்கு காரணமாகி விட்டது.
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியும், சமூக புரட்சியும் தொடர காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மீண்டும் தேவை என்பதை நாட்டு மக்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் விரைவில் உரிய நேரத்தில் அறிவிப்போம். நாங்கள் வெளிப்படையான நிர்வாகத்தை கொடுத்துள்ளோம். எனவே மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வரும் என்று நம்புகிறேன்.
காங்கிரஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் பட்சத்தில் நான் மீண்டும் 3–வது தடவையாக பிரதமர் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை. இன்னும் சில மாதங்களில் தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் பதவி பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பேன். பிரதமர் பதவியை ஏற்க ராகுல்காந்திக்கு தகுதிகள் உள்ளது. நான் நாட்டுக்காக கடமை உணர்வுடன் பணியாற்றி இருக்கிறேன். நான் என் அதிகாரத்தை என் நண்பர்களுக்கோ அல்லது என் உறவினர்களுக்கோ தவறாக பயன்படுத்தவில்லை.
உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது நாட்டில் இருந்து பொருளாதார தேக்கம் நீங்கி விட்டது. கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளோம். நாட்டில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. உற்பத்தித் துறையில் நிறைய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறோம். பணவீக்கத்தை முதலில் கட்டுப்படுத்த முடிய வில்லை. உணவுப் பொருள்கள் விலையை கட்டுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது.
எங்களது கொள்கைகளை அமல்படுத்தி வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது. வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்ற வற்றில் வெளிப்படையான ஏலம் நடத்தப்படும் என்று நான் வற்புறுத்தி கூறினேன். அவற்றில் சில முறைகேடுகள் நடந்து இருக்கலாம். அவற்றை பத்திரிகைகள் பெரிதுபடுத்தி விட்டன. நாங்கள் நாட்டில் மிக விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் விவசாய கடனை 7 மடங்கு உயர்த்தி 7 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளோம்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பிறகு அவர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
2014–ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தல் வரை நான் பதவியில் நீடிப்பேன். அதில் மாற்றம் இல்லை. தேர்தலுக்கு பிறகு புதிய பிரதமரிடம் பொறுப்பை ஒப்படைப்பேன். இந்த விஷயத்தில் நான் ராகுல்காந்திக்கு வழிவிட தயாராக உள்ளேன். அவருக்கு அதற்கான தகுதிகள் உள்ளது. பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் ஒரு தடவை கூட நினைத்தது இல்லை. எனது பொறுப்பை நான் சிறப்பாக செய்துள்ளேன். எந்த பயமும் இல்லாமல், பாரபட்சமும் இல்லாமல் பணியாற்றி இருக்கிறேன்.
விலைவாசி உயர்வு எங்கள் கட்டுப்பாட்டை மீறிப் போய் விட்டது. உலகளாவிய பொருளாதார மந்தமே அதற்கு காரணமாகும். பிரதமர் பதவியில் நான் என்னால் முடிந்த எல்லா நல்ல பணிகளையும் செய்து முடித்து விட்டேன். இனி வரலாறுதான் நான் எப்படி செயல்பட்டேன் என்பதை தீர்ப்பளித்து சொல்ல வேண்டும். மீடியாக்கள் மற்றும் எதிர்க் கட்சிகளை விட வரலாறு என்னிடம் இரக்கமாக நடந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.
கூட்டணி அரசியல் கட்சிகளால்தான் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது. ஆட்சி நடத்தும் விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். ராகுல் காந்தியை மந்திரி சபையில் சேர்க்க நான் பல தடவை விரும்பினேன். ராகுல்காந்தி மந்திரி பொறுப்பை ஏற்று இருந்தால் எனது அரசு பலம் பெற்று இருக்கும் என்று நான் நினைத்தது உண்டு.
பிரதமர் பதவியில் எனக்கு யாரும் நெருக்கடி கொடுக்க வில்லை. பதவியில் இருந்து விலகுமாறு காங்கிரசில் யாரும் சொல்லவில்லை. கடந்த 9 ஆண்டுகால பிரதமர் பொறுப்பில் அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. அண்டை நாடுகளுடன் சுமூக உறவை மேம்படுத்தியுள்ளோம். பல்வேறு சூழ்நிலை காரணமாக என்னால் பாகிஸ்தான் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள முடியவில்லை. மற்றபடி எல்லா நாடுகளுடன் நல்ல நட்பை ஏற்படுத்தி பொருளாதாரத்தை முன்னேற்றி இருக்கிறோம்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

No comments:
Post a Comment