Friday, January 3, 2014

ஆத்தூரில் இன்று காலை மயங்கி விழுந்த பிளஸ்–2 மாணவிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை - www.tnfinds.com - Best Site in the World

ஆத்தூரில் இன்று காலை மயங்கி விழுந்த பிளஸ்–2 மாணவிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் பூமணி (16) இதே பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகள் பிரியா (16). மற்றும் சில மாணவிகள் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இவர்கள் அனைவரும் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் தங்கி தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் புத்தாண்டு விடுமுறை என்பதால் இந்த மாணவிகள் சொந்த ஊரான கருமந்துறைக்கு சென்றனர். பின்னர் மீண்டும் அவர்கள் இன்று விடுதிக்கு கருமந்துறையில் இருந்து கலக்கம்பாடிக்கு செல்லும் பஸ்சில் வந்தனர்.
காலை 9.30 மணிக்கு அவர்கள் விடுதி எதிரே உள்ள விநாயகபுரம் பஸ் நிறுத்ததில் வந்து இறங்கினர். அப்போது மாணவிகள் பூமணி, பிரியா ஆகியோர் திடீரென மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த மற்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.
பள்ளி சீருடையில் 2 மாணவிகள் மயங்கி விழுந்ததால் அந்த பகுதியில் கூட்டம் கூடி விட்டது. பின்னர் இது குறித்து மற்ற மாணவிகள் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 2 மாணவிகளும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்கள் காலையில் பள்ளிக்கு வர வேண்டும் என்பதால் சாப்பிடாமல் வந்ததால் மயங்கி விழுந்தார்களா? அல்லது அவர்கள் சாப்பிட்டதில் ஏதாவது விஷம் கலந்ததா? என்று விசாரணை நடந்து வருகிறது.


More News Click Here............ 

No comments: