ஆஸியிடம் தோற்ற பின் அமெரிக்கப் பெண்ணை ரூமுக்குக் கூப்பிட்டு 'டிஸ்கஸ்' செய்த பனீசர்!
லண்டன்: ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஆசஷ் தொடரில் இங்கிலாந்து மோசமான நிலையில் தோற்ற அதிர்ச்சியில் அந்த நாட்டு ரசிகர்கள் இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனீசர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடைசிப் போட்டியில் இங்கிலாந்து மோசமான முறையில் தோல்வியுற்ற பின்னர் ஹோட்டல் அறைக்குத் திரும்பிய பனீசர், அலிஸன் என்ற அமெரிக்கப் பெண்ணை தனது அறைக்கு அழைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாக இங்கிலாந்தின் தி மிர்ரர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மற்ற வீரர்கள் எல்லாம் தோல்விக்கான காரணம் குறித்து கவலையுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் பனீசர், இந்தப் பெண்ணுடன் அறையில் நேரம் செலவிட்டது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பனீசரை அம்பலப்படுத்திய அலிஸன்.
பனீசர் தன்னுடன் பேசியது என்ன என்பது குறித்து அலிஸனே பேட்டி கொடுத்துள்ளார். பனீசரிடம் தோல்விக்கான சோகத்தைக் காண முடியவில்லை என்றும் தன்னுடன் கிரிக்கெட் குறித்துப் பேசாமல் தன்னைக் கவரும் வகையிலான பேச்சையே அவர் கையாண்டதாகவும் அலிஸன் கூறியுள்ளார்.
பனீசர் இப்படி இருப்பார் என்று நினைக்கவில்லை.
இதுகுறித்து அலிஸன் கூறுகையில், நான் அவருடன் கிரிக்கெட் குறித்துத்தான் பேச விரும்பினேன். ஆனால் அவரோ என்னைக் கவருவதற்கான முயற்சிகளில்தான் கவனம் செலுத்தினார். அது எனக்கு வினோதமாக இருந்தது என்றார் அலிஸன்.
ஆப் மூலம் டேட்டிங்.
ஒரு ஸ்மார்ட் போன் ஆப் மூலமாக 20 வயதாகும் அலிஸனுக்கும், 31 வயதாகும் பனீசருக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாம். பனீசர்தான் அலிஸனை ஹோட்டலுக்கு வருமாறு அழைத்தாராம். இத்தனைக்கும் வீரர்களுக்கான அறைகளுக்கு வேறு யாரும் அனுமதி கிடையாது. ஆனால் எப்படியோ அலிஸனை கூட்டிக் கொண்டு வந்து விட்டார் பனீசர்.
மெசேஜ் அனுப்பிக் கவர்ந்தார்.
அலிஸன் மேலும் கூறுகையில், நான் மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது வந்திருந்தேன். அப்போது எனக்கு அவர் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். நானும் பதில் அனுப்பினேன். அப்போது விளையாட்டுக்காக யாரோ அனுப்பியதாகவே நினைத்தேன். பிறகுதான் பனீசர் என்று தெரிந்து வியந்தேன்.
பனீசர் அழைப்பை ஏற்றேன்.
பிறகுதான் என்னை அறைக்கு அழைத்தார் பனீசர். நானும் அதை ஏற்றுச் சென்றேன் என்று கூறியுள்ளார் அலிஸன்
எப்பவுமே இப்படித்தான்.
பனீசர் சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. கடந்த வருடம், அவர் இங்கிலாந்து நைட் கிளப்புக்குப் போயிருந்தபோது அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்ததாக சர்ச்சையில் சிக்கி வெளியேற்றப்பட்டார்.
மனைவியுடன் விவாகரத்து.
அதைத் தொடர்ந்து அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து நடந்தது.
நடவடிக்கை வருமா...
தற்போது பெண்ணுடன் ஹோட்டல் ரூமில் பேசிய விவகாரத்தால் அவர் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது. பனீசர், இந்திய வம்சவாளி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment