Tuesday, January 7, 2014

ஏடிஎம்களில் இனி மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும்! - www.tnfinds.com -Best site in the world....


ஏடிஎம்களில் இனி மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும்!

மும்பை: ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்களின் இலவச பயன்பாட்டை மாதத்திற்கு 5 ஆக குறைக்குமாறு இந்திய வங்கிகள் சங்கம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு பிரிந்துரை செய்துள்ளது.

வாடிக்கையாளர் ஒருவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் மையத்தில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் அதற்கு கட்டணம் இல்லை. ஆனால் அதுவே அவர் தனக்கு கணக்கு இல்லாத வேறு ஒரு வங்கியின் ஏடிஎம் மையத்தில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அவர் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போது கட்டணம் வசூலிக்கப்படும். 

இந்நிலையில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்பட அனைத்து ஏடிஎம் மையங்களையும் சேர்த்து மாதம் 5 முறை மட்டுமே கட்டணமில்லாமல் பணம் எடுக்க அனுமதிக்குமாறு இந்திய வங்கிகள் சங்கம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.

 பெங்களூரில் ஏடிஎம் மையம் ஒன்றில் பெண் அதிகாரி தாக்கப்பட்டதையடுத்து அனைத்து ஏடிஎம் மையங்களிலும் காவலாளியை பணியமர்த்துமாறு மாநில அரசுகள் வங்கிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தான் இந்திய வங்கிகள் சங்கம் இந்த பரிந்துரையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More Hot News Click Here...







No comments: