'பேஸ்புக்' உதவியால் மாணவன் கண்டுபிடிப்பு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில், வசிக்கும், 16 வயது மாணவன் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை கடந்தாண்டு துவக்கத்தில் இறந்தார். இதனால், மிகவும் வேதனை அடைந்த சுரேஷின் தாய், ஒரே மகனான சுரேஷை மட்டுமே நம்பியிருந்தார். மகன் படித்து வந்ததும், தன் கஷ்டம் எல்லாம் தீரும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.
ஆனால், அவர் நம்பிக்கை சில நாட்களில் வீணானது. மகனின் படிப்பு மோசமாக உள்ளதை அறிந்து கவலையடைந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவர், சுரேஷை, கடுமையாக அடித்து உதைத்தார். ஏற்கனவே, தந்தையை இழந்த கவலையில் இருந்த சுரேஷ், தாய் அடித்ததால், வீட்டை விட்டு ஓடினான். அவன் எங்கே இருக்கிறான் என்பது தெரியாமல், சுரேஷின் தாய், பரிதவித்தார். சுரேஷ், 10ம் வகுப்பு படிக்கும்போதே, கம்ப்யூட்டரை பயன்படுத்துவதில் நன்கு தேர்ச்சி பெற்று இருந்தான். அவனுக்கு, சமூக வலைத்தளமான, 'பேஸ்புக்'கில் கணக்கு இருப்பது தெரியவந்தது. இது குறித்து, போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து, ராய்ப்பூரில் உள்ள, சைபர் செல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. வீட்டை ஓடிய பிறகும், சுரேஷ், தொடர்ந்து பேஸ்புக்கில் இருப்பது தெரியவந்தது. சுரேஷின் ஐ.டி., அட்ரசை வைத்து, அடிக்கடி செல்லும், கம்ப்யூட்டர் மையம் எங்குள்ளது, என்று போலீசார் தேடினர். இறுதியில், மும்பையில் பிந்தி பஜாரில் ஒரு கம்ப்யூட்டர் மையத்தில் இருப்பதை கண்டுபிடித்து, அங்கு போலீசார் சென்றனர். சுரேசை அழைத்து கொண்டு, ராய்ப்பூருக்கு வந்து, அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment