Monday, January 6, 2014

உங்கள் கணவன் (அ) மனைவியோடு செல்லவேண்டிய இடங்கள்! - www.tnfinds.com -Best Site In The World


உங்கள் கணவன் (அ) மனைவியோடு செல்லவேண்டிய இடங்கள்!



இந்தியத் திரைப்படங்களில் அடிக்கடி டூயட் பாட வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் பல வெளிநாடுகளிலிருந்தும் நம் நாட்டிற்கு ஹனிமூன் கொண்டாட வருபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் கல்யாணம் நடப்பதென்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. அப்படி திருமணம் முடிந்த பிறகு ஹனிமூன் செல்வதோ, கணவன் அல்லது மனைவியோடு எங்காவது தனிமையில் செல்ல நினைப்பவர்களுக்கு இந்தியாவிலேயே ஏராளமான இடங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. எனவே உங்கள் காதலரை கூட்டிக்கொண்டு காதல் வானில் பறக்க தயாராகுங்கள்.


ஸ்ரீநகர் 



ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீநகர் அழகிய ஏரிகள், படகு வீடுகள் மற்றும் கண்கவரும் வகையில் அமைந்துள்ள எண்ணற்ற முகலாய தோட்டங்கள் ஆகியவைகளுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். இங்கு மிகவும் பிரசித்திபெற்ற தால் ஏரியில் உள்ள ஷிக்கரா எனும் படகு வீடுகள் காதல் விளையாட்டுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதாகும்.

குல்மார்க் 



குல்மார்க் 2730 மீட்டர் உயரத்தில்,ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ளது. குல்மார்க் என்றால், மலர் மைதானம் என்று பொருள். நீங்கள் சாதாரணமாக மலர்ப்படுக்கை தானே பார்த்திருப்பீர்கள். இங்கு வாருங்கள் உங்கள் காதல் துணையோடு டூயட் பாட ஒரு மலர் மைதானமே இங்கு காத்திருக்கிறது.

லடாக் 




உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான கரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில், கடல் மட்டத்தின் மேல் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லடாக். அழகிய ஏரிகளும், மடங்களும், மதி மயக்கும் இயற்கை காட்சிகளும், மலை உச்சிகளும் லடாக்கின் முக்கிய ஈர்ப்புகள். எல்லா வகையிலும் உங்கள் காதலரோடு சிறப்பான நேரத்தை செலவிட லடாக் வெகு பொருத்தமான இடம்.

தர்மஷாலா


 இமாச்சல பிரதேசத்தின் அழகின் அழகாக விளங்கும் தர்மஷாலா மனதை மயக்கும் ஒரு மலை வாசஸ்தலமாகும். தர்மஷாலாவின் பெரும்பான்மை பகுதிகள் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருப்பதோடு, இக்காடுகளில் நீங்கள் ஓக் மற்றும் ஊசியிலை மரங்களைக் காணலாம். அதோடு மூன்று பக்கங்களிலும் தௌலதர் மலைத் தொடர்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது தர்மஷாலா. இப்படி ஒரு சூழ்நிலையில் உங்கள் காதல் துணையோடு இருக்கின்ற தருணத்தை கொஞ்சம் சித்தித்து பாருங்களேன்!!!

ஆலி


 ஆலியில் ஆசியாவிலேயே மிகவும் நீளமான மற்றும் உயரமான கேபிள் கார் வசதி சுமார் 5 கிலோமீட்டர்களுக்கு செய்யப்பட்டுள்ளது. கோண்டோலா என்று அழைக்கப்படும் இந்த கேபிள் கார்களில் 13500 அடி உயரத்தில் உங்கள் காதலரோடு செல்லும் திரில்லிங் பயணத்தை உங்களால் மறக்கவே முடியாது.


More Hot News Click Here...

No comments: