Monday, January 6, 2014

அபுதாபி-சென்னை தினசரி விமான சேவை!! ஜெட் ஏர்வேஸின் புதிய திட்டம்.. - www.tnfinds.com - Best Site In The World


அபுதாபி-சென்னை தினசரி விமான சேவை!! ஜெட் ஏர்வேஸின் புதிய திட்டம்..


சென்னை: 

தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், ஜனவரி 16ஆம் தேதியில் இருந்து அபுதாபி- சென்னை வரை தினசரி விமான சேவையைத் துவங்குகிறது. இந்த புதிய சேவை அபுதாபி வழியாக ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற உலகில் உள்ள பல இடங்களை சென்னையுடன் இணைக்கும் என ஜெட் ஏர்வேஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த விமான சேவை நிறுவனம், அபுதாபியிலிருந்து டெல்லி, கொச்சின், மும்பை மற்றும் குவைத் ஆகிய இடங்களுக்கு தினசரி விமான சேவையை செயல்படுத்தி வருகிறது. "அபுதாபியிலிந்து சென்னைக்கான இந்த தினசரி விமான சேவை, எங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும் என்பதை உறுதியாக நம்புகிறோம்" என ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வர்த்தக சேவைக்கான மூத்த துணைத் தலைவர் கெளராங்க் ஷெட்டி கூறினார். இந்த விமான சேவைகள் மூலம், வளைகுடாவின் பல்வேறு இடங்களுக்கு தினசரி 50ற்கும் அதிகமான விமானங்களை இயக்கும் முதல் உள்நாட்டு தனியார் நிறுவனம் என்ற பெருமையைப் ஜெட் ஏற்வேஸ் பெறும் எனவும் இது தெரிவித்தது. அபுதாபி, பஹரைன், துபாய், தோகா, குவைத், ஷர்ஜா, ஜெட்டா, தம்மம், மஸ்கட் மற்றும் ரியாத் ஆகிய தினசரி சேவைகள் இதன் வளைகுடாவுக்கான சேவைகளில் உள்ளடக்கபடுகிறது.

More Hot News Click Here...


No comments: