ராத்திரிக்குள்ள ட்ரைலர் ரிலீஸ் பண்ணிடுவோம் - ஜில்லா இயக்குநர் நேசன்
இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட விஜய்யின் ஜில்லா ட்ரைலர், இன்னும் வெளியாகவில்லை. இன்று இரவு நிச்சயம் வெளியாகும் என படத்தின் இயக்குநர் நேசன் தெரிவித்துள்ளார்.
படம் வெளியாக இன்னும் இரு தினங்கள் மட்டுமே உள்ளது. பொதுவாக ட்ரைலர்கள் ஒரு மாதத்துக்கு முன்பே வெளியாவது வழக்கம்.
ஜில்லா பட ட்ரைலர்களை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுவதா முதலில் அறிவித்தனர்.
பின்னர் டிசம்பர் 31-ம் தேதிக்கு தள்ளிப் போட்டனர். இந்த நிலையில் புத்தாண்டு தினத்திலிந்து இதோ அதோ என்று சொல்லப்பட்டு வந்தது. இன்று நிச்சயம் ட்ரைலர் வெளியாகும் என நேற்று அறிவித்தனர்.
ஆனால் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து இயக்குநர் நேசன் கூறுகையில், "ட்ரைலரை வெளியிட நாங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இன்று இரவுக்குள் ஜில்லாவின் இரு ட்ரைலர்கள் வெளியாகும்," என்றார்.
No comments:
Post a Comment