Tuesday, January 7, 2014

நெல்லையில் 90 அடியில் பிரமாண்டமாக நிற்கும் 'வீரம்' அஜீத் - www.tnfinds.com - Best site in the world....


நெல்லையில் 90 அடியில் பிரமாண்டமாக நிற்கும் 'வீரம்' அஜீத்

நெல்லை: நெல்லையில் உள்ள பாம்பே தியேட்டரில் வீரம் அஜீத்தின் 90 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. 

அஜீத் குமாரின் வீரம் படம் வரும் 10ம் தேதி பொங்கல் விருந்தாக ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை தல படத்துடன் கொண்டாட ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.


வீரம் படம் வெற்றி பெற வாழ்த்தி பிரமாண்ட கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை வைக்க அஜீத் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நெல்லையில் உள்ள பாம்பே தியேட்டர் முன்பு வீரம் படத்தில் வேட்டி, சட்டையுடன் வரும் அஜீத்தின் கிராமத்து கெட்டப் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த கட் அவுட் 90 அடி உயரம் கொண்டதாகும். இந்த பிரமாண்ட கட் அவுட் பற்றி அஜீத் ரசிகர்கள் ட்விட்டரில் பெருமையாக தெரிவித்து வருகின்றனர்.

More Hot News Click Here...








No comments: