Thursday, January 2, 2014

உயிர் காத்த மரத்தோடு புத்தாண்டு: ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் நெகிழ்ச்சி - www.tnfinds.com - Best site in the world..

உயிர் காத்த மரத்தோடு புத்தாண்டு: ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் நெகிழ்ச்சி


தர்மபுரி: ஒகேனக்கல்லில், காவிரியாற்று வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய மரத்தோடு, பரிசல் ஓட்டிகள், இந்த புத்தாண்டை கொண்டாடினர்.

கர்நாடக மாநிலம், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, ஆகஸ்ட், 5ம் தேதி, 1.15 லட்சம் கனஅடி, தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஓகேனக்கல்லில் நீர்வரத்து வேகமாக உயர்ந்தது. திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் குளித்து கொண்டிருந்த, தர்மபுரியைச் சேர்ந்த மாதப்பன், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். தொடர்ந்து, அவரை, பரிசலில் சென்று, காப்பாற்ற முயன்ற பரிசல் ஓட்டிகளான, ராமகிருஷ்ணன், முத்து, சகாதேவன் ஆகியோரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

 வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேரும், மரக்கிளை ஒன்றினைப் பிடித்துக்கொண்டு, சுமார், 14 மணி நேரம் உயிருக்கு போராடினர். மறுநாள், ஹெலிகாப்டர் உதவியுடன், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர், நான்கு பேரையும் மீட்டனர்.

 தற்போது, புத்தாண்டை வரவேற்கும் வகையில், பரிசல் ஓட்டிகள் மூவரும், தங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய மரத்தருகே, கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து, அங்கிருந்த சுற்றுலா பயணிகளுக்கும் கேக் வழங்கினர்.

More Hot News Click Here...



No comments: