Thursday, January 2, 2014

5 லட்சம் வானவேடிக்கைகளுடன் கின்னஸ் சாதனயோடு புத்தாண்டை வரவேற்ற துபாய் - www.tnfinds.com - Best site in the world...


5 லட்சம் வானவேடிக்கைகளுடன் கின்னஸ் சாதனயோடு புத்தாண்டை வரவேற்ற துபாய்

துபாய்: புத்தாண்டையொட்டி நள்ளிரவில் 5 லட்சம் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டது. இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 

புத்தாண்டு பிறக்கையில் அதை வரவேற்கும் விதமாக துபாயில் பிரமாண்டமாக வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இந்த வான வேடிக்கை நிகழ்ச்சியை பிரமாதமாக நடத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் சரியாக 12 மணிக்கு வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடத்த கடந்த 10 மாதங்களாக திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


5 லட்சம் வானவேடிக்கைகள்.




நேற்று முன்தினம் இரவு 12 மணி அடித்ததும் 5 லட்சம் வானவேடிக்கைகள் விடப்பட்டன. தொடர்ந்து 6 நிமிடங்கள் நடந்த நிகழ்ச்சி தான் இதுவரை உலகில் நடந்த பிரமாண்ட வானவேடிக்கையாகும்.

கின்னஸ் சாதனை.


துபாயில் நடந்த வானவேடிக்கை நிகழ்ச்சி புதிய சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்பு 2012ம் ஆண்டில் குவைத்தின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தின்போது 77 ஆயிரத்து 282 வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டது தான் கின்னஸ் சாதனையாக இருந்தது.

புர்ஜ் கலிபா.


வான வேடிக்கைகள் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா, பாம் ஜுமைரா, புர்ஜ் அல் அராப் உள்ளிட்ட கட்டிடங்களின் வடிவில் இருந்தது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

100 கம்ப்யூட்டர்கள்.


இந்த பிரமாண்ட வானவேடிக்கை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க 100 கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் நிகழ்ச்சி துவங்க வேண்டும் என்பதற்காக 200 நிபுணர்கள் பணியாற்றியுள்ளனர்.

More Hot News Click Here...























No comments: