Friday, January 3, 2014

டீ கடை பெஞ்ச் - www.tnfinds.com - Best site in the world...

டீ கடை பெஞ்ச்

அரசு இ-மெயில் முகவரியில் ஆபாச தகவல்! ''மதுரை போலீசுகாரங்களுக்கு, தலைவலி ஆரம்பிச்சிட்டு வே...'' என்ற படி, நாயர் கடைக்கு வந்தார் அண்ணாச்சி.
''என்ன பிரச்னை பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க, மதுரை போலீசுக்கு, முதல் தலைவலி, சுவர் விளம்பரம் ரூபத்தில் வந்திருக்கு வே... சில நாட்களா, மாநகராட்சிகிட்டே அனுமதி வாங்காம, சுவர் விளம்பரம் செஞ்சதா, எதிர்க்கட்சிக்காரங்க மேலே, புகார் கிளம்பிச்சு... அதுக்கு, போலீசுகாரவ வழக்கும் பதிவு செஞ்சாவ...

''ஆனா, 'அ.தி.மு.க.,காரங்க மேலே, கேஸ் போடுறது இல்லை'ன்னு, இப்ப, எதிர்க்கட்சிக்காரங்க, குதியா குதிக்குதாவ... இதோட நிக்கலே... அ.தி.மு.க.,காரவ எழுதின சுவர் விளம்பரத்தை போட்டோ எடுத்து, போலீஸ் ஸ்டேஷன்ல குடுக்காவ... ஆனா, அவங்க என்ன செய்வாங்க பாவம்... ஆளுங்கட்சியை முறைச்சிக்க முடியுமா... தலைவலி தான்...'' எனக் கூறி முடித்தார் அண்ணாச்சி.

''டில்லி மேலிடம் சொல்லி தான், தே.மு.தி.க., தலைவரு விஜய காந்தை, மத்திய அமைச்சர் வாசன் சந்தித்து பேசுனாராம் பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''விஜயகாந்தை காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்து பாருங்கன்னு வாசனிடம், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், 'அசைன்மென்ட்' கொடுத்திருக்காரு... அதனால தான், புத்தாண்டு வாழ்த்து சொல்வதை சாக்கா வச்சிக்கிட்டு, விஜயகாந்தை கூட்டணிக்கு வாங்கன்னு வாசன் கூப்ட்டாரு... ஆனா, விஜயகாந்த் சில நிபந்தனைகளை விதிச்சிருக்காராம்... அந்த நிபந்தனைகளுக்கு, டில்லி மேலிடம் சரின்னு சொன்னால், அதுக்கப்புறமா, கூட்டணி பத்தி பேசிக்கலாமுன்னு, சொல்லி அனுப்பிட்டாரு...

''விஜயகாந்த் விதிச்ச நிபந்தனையை, புத்தாண்டு பிறப்பதற்கு முன், டில்லி மேலிடத்திற்கு வாசன் சொல்லிட்டாரு... கட்சிக்காரங்க, உதவியாளருங்கன்னு, யாரையும், தன் கிட்டே வச்சிக்காம, 'கமுக்கமா' போன் பேசினதா தகவல்...'' எனக் கூறினார் அன்வர்பாய்.

''அதானே பார்த்தேன்... கட்சிக்காரங்களுக்கு வாசன் பேசின தகவல் தெரிஞ்சிருந்தா, நிபந்தனை பத்தி, புட்டு புட்டு வச்சிருப்பாங்களே...'' எனக் கூறினார் அந்தோணிசாமி.

''ஆபாச 'மெயில்' பத்தி விசாரிக்கிறாங்க...'' என, கடைசி மேட்டரை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''என்ன மேட்டர் வே... விவரமா சொல்லும்...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

''பொதுப்பணித் துறையில, நிர்வாக தகவல் பரிமாற்றத்துக்காக, உயர் அதிகாரிகளுக்கு, இ-மெயில் ஐ.டி., கொடுத்திருக்காங்க... இந்த, ஐ.டி.,யில, சமீபத்தில ஒரு தகவல் வந்திருக்கு... அதுல, துறையோட உயர் பொறுப்பில உள்ள அதிகாரி, சமீபத்தில் நீக்கப்பட்ட அமைச்சர், பிரபல நடிகைன்னு, மூணு பேரையும் தொடர்பு படுத்தி ஆபாசமா எழுதியிருந்தாங்க...

''அரசோட நேரடி மெயில்லயும், இந்த தகவல் வந்திருக்காம்... இதனால், அதிர்ச்சியான அதிகாரிங்க, இ-மெயில் ஐ.டி.,யில, ஆபாச தகவல் பரப்புறது யாருனு விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க...'' எனக் கூறி முடித்தார் அந்தோணிசாமி.

More Hot News Click Here...

No comments: