'டவுட்' தனபாலு
ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ: இலங்கை தமிழர் பிரச்னையில், காங்கிரஸ் செய்த தவறுகளை, பா.ஜ., செய்யாது.
டவுட் தனபாலு: 'பா.ஜ.,வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம்'னு சொல்ற நீங்க, இதை எப்படி உறுதியா நம்புறீங்க... கச்சத்தீவு விவகாரத்தில் வேண்டுமானால், காங்கிரசிடம் இருந்து பா.ஜ., மாறுபடும்... ஆனா, இலங்கையுடனான உறவைப் பேணுவதில், பெரிய வித்தியாசம் காட்டாது என்பது, உங்களுக்கு தெரியாதோன்னு, 'டவுட்' வருதே...!
காங்.,கைச் சேர்ந்த, ஆந்திர முதல்வர், கிரண்குமார் ரெட்டி: தனிக்கட்சி துவங்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. காங்கிரசின் தெலுங்கானா முடிவை மட்டும் தான், நான் எதிர்க்கிறேன்.
டவுட் தனபாலு: மாநிலத்தையே ரெண்டாப் பிரிக்க முடிவெடுத்திடுச்சு, மத்திய காங்கிரஸ் அரசு... இதுக்கே அலட்டிக்காத நீங்க, வேறு எதைப் பெருசா நினைக்கப் போறீங்க... இதைவிட்டால், மறுபடியும் முதல்வர் பதவி எப்போதும் கிடைக்காது என்பதை, நல்லா உணர்ந்ததால் தான், தலைமையின் முடிவை எதிர்ப்பது மாதிரி நடிக்குறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம நல்லாத் தெரியுதே...!
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் யாதவ்: காங்., துணைத் தலைவர் ராகுல் முன், நரேந்திர மோடியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் ஒன்றும் இல்லாதவர்கள்.
டவுட் தனபாலு: தொண்டரா பயணத்தை துவக்கி, முதல்வராகி, 2001ல் இருந்து, குஜராத் ஆட்சியை தக்க வைச்சுட்டு வர்றாரு மோடி... கட்சி துவங்கிய ஓராண்டுக்குள், டில்லியில் ஆட்சியைப் பிடித்தாரு கெஜ்ரிவால்... ராகுல் முன் இவர்கள் ஒன்றும் இல்லாதவர்கள் என்றால், பணம் காசில் சொல்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!

No comments:
Post a Comment