Tuesday, January 7, 2014

அழகிரி அட்டாக்: ஸ்டாலினை அப்செட் ஆக்கிய போஸ்டர்கள்… பின்னணி தகவல்கள் - www.tnfinds.com - Best site in the world..


அழகிரி அட்டாக்: ஸ்டாலினை அப்செட் ஆக்கிய போஸ்டர்கள்… பின்னணி தகவல்கள்

மதுரை: ஊர் ஊராகச் சுற்றினால் கட்சி வளர்ந்து விடுமா?... கூட்டம் போட்டால் மட்டும் கட்சி வளர்ந்துவிடுமா? இது மதுரையில் முன்னாள் அமைச்சர் அழகிரியின் பிறந்தநாளுக்காக தயாரான ஒட்டப்படாத போஸ்டர்கள்.

 இந்த போஸ்டர்கள்தான் மு.க.ஸ்டாலினை அப்செட் ஆக்கியவை. 

அதில் ஒன்றுதான் 'மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம்'. இந்த போஸ்டர்கள் ரெடியான உடனே ஸ்டாலின் கைகளுக்கு சென்றுள்ளன. 

அவற்றை வைத்துக் கொண்டு புத்தாண்டு தினத்தன்று கருணாநிதியை சந்தித்த ஸ்டாலின், விஷமிகள் மீது நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும் என்று கூறியுள்ளார். இதன்பின்பே கருணாநிதி அறிக்கை விட்டுள்ளார்.

அது போதாது என்று மேலும் ஸ்டாலின் வலியுறுத்தவே மதுரை மாநகர திமுக அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டுவிட்டது.


அமைதியாக இரு....


கடந்த வாரத்தில் திமுக தலைவரை சந்திந்த அழகிரியிடம் அமைதியாக இரு என்று சொல்லி அனுப்பியுள்ளார் கருணாநிதி. ஆனால் அதையும் மீறி அழகிரி ஆதரவாளர்கள் செயல்பட்டதுதான் கருணாநிதியை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

மதுரை திரும்பும் அழகிரி.


மதுரை மாநகர திமுக கலைக்கப்பட்டபோது அழகிரி மதுரையில் இல்லை, சென்னையில் இருந்துள்ளார். அன்று இரவு திருப்பதி போன அவர் மீண்டும் சென்னைக்கு வந்து நிலைமையை கண்காணித்து வருகிறார். 10ம் தேதி மதுரை திரும்பும் வரை பொறுத்திருக்குமாறு தனது ஆதரவாளர்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளாராம்.


கிங் ஆப் தமிழ்நாடு..


ஜனவரி 30ம் தேதி அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கிங் ஆப் தமிழ்நாடு, மாவீரனே... உள்ளிட்ட பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் போட்டோ எடுத்து ஸ்டாலின் பார்வைக்கு அனுப்பியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.

யார் அந்த கறுப்பு ஆடு..


சிக்கல்களுக்கு காரணமே போஸ்டர்களை ஸ்டாலின் பார்வைக்கு அனுப்பியதுதான் என்பதை உணர்ந்துள்ள அழகிரி, நம்மிடைய ஒரு கறுப்பு ஆடு உள்ளது. அதுதான் நம் ஆதரவாளர்கள் அச்சடித்த போஸ்டர்களை எடுத்துக் கொடுத்துள்ளது. அது யார் என்று கண்டுபிடியுங்கள் என்று கூறியுள்ளாராம்.

முன்னதாக சிக்கிய கேசட்.


புதிய தலைமுறைக்கு அழகிரி கொடுத்த பேட்டி ஜனவரி 3ம் தேதியன்றே திமுக தலைமையிடம் கொடுக்கப்பட்டு விட்டதாம். பேட்டி ஒளிபரப்பாவதற்கு முன்பே அதில் உள்ள விஷயங்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டதும், தேமுதிகவிற்கு எதிரான கருத்து, தலைமை பற்றி கருத்து கூறியது போன்றவைகள்தான் மதுரை திமுக கலைப்புக்கு காரணம் என்கின்றனர்.


மூத்த தலைவர்கள் அதிருப்தி..



மாவட்ட திமுக நிர்வாகம் கலைக்கப்பட்டதற்கு துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறியதாக தெரிகிறது. குடும்பச் சண்டை நாடாளுமன்றத் தேர்தலில் சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடாதே என்பதுதான் திமுகவினரின் கவலையாகும்.

போஸ்டர் பிரச்சனை.


அழகிரியின் பிறந்தநாளுக்காக ஒட்டப்படும் போஸ்டர்களால் பிரச்சனை ஏற்படுவது இன்று நேற்றல்ல கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மதுரையில் மட்டுமல்லாது சென்னையில் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் கட்சியில் கொந்தளிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

More Hot News Click Here...










































No comments: