அட பக்கி... காதலிக்கு சர்ப்ரைஸ் தர நிர்வாணமாக வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்து சிக்கித் தவித்த வாலிபர்
மெல்போர்ன்: காதலிக்கு சர்பிரைஸ் தருவதாக எண்ணிக் கொண்டு நிர்வாண கோலத்தில் வாஷிங் மெஷினுக்குள் போய் ஒளிந்து கொண்ட வாலிபர், கடைசியில் அதிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டார். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், அவரது உடல் முழுவதும் ஆலிவ் எண்ணெயைத் தடவி, அந்த நபரை வெளியே கொண்டு வந்தனர்.
அந்த நபர் வடக்கு மெல்போர்ன் நகரின் மூரோப்னா என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் சனிக்கிழமையன்று தனது வீட்டில் ஒரு சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதாவது தன்னைத் தேடி வரும் காதலிக்கு திடீர் இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று நினைத்த அவர் டிரஸ்ஸைக் கழற்றி விட்டு நிர்வாண கோலத்திற்கு மாறினார்.
பின்னர் வாஷிங் மெஷினுக்குள் போய் ஒளிந்து கொண்டார். ஆனால் உள்ளே போன சிறிது நேரத்திலேயே அதில் வசமாக சிக்கிக் கொண்டார். அவரால் வெளியேற முடியவில்லை.... மாட்டிக் கொண்டார். இதையடுத்து தீயணைப்புப் படையினர், போலீஸார், மருத்துவமனைக்குத் தகவல் பறந்தது. அத்தனை பேரும் ஓடி வந்தனர். உள்ளே சிக்கிய நபரை மீட்க முயற்சிகள் தொடங்கின. ஆனால் அவரை வெளியே கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து அவர் உடலில் ஆலிவ் எண்ணையைப் பூசினர்.
அதன் பிறகு மெதுவாக அவரை வெளியே இழுத்து மீட்டனர். கிட்டத்தட்ட அரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் அந்தக் குறும்புக்காரர் மீட்கப்பட்டார். வெளியே வந்த அந்த நபருக்கு பெரும் தர்மசங்கடமாகி விட்டதாம். அவரது முகத்தில், அவமானம் தாண்டவமாடியது.
இப்படித்தான் சமீத்தில் அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில், ஒரு 11 வயது சிறுமி, வீட்டில் தனது சகோதரிகளுடன் கண்ணாமூச்சி ஆடியபோது வாஷிங் மெஷினுக்குள் போய் ஒளிந்து கொண்டபோது மாட்டிக் கொண்டார்.
அவரையும் போலீஸார் வந்து மீட்டனர். இதுதொடர்பான வீடியோவும் யூடியூபில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது இந்த வாலிபர்.... ஒளிய உனக்கு வேற எடமாப்பா கிடைக்கலா ராசா... ?
No comments:
Post a Comment