Friday, January 3, 2014

கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்.. 'தலைவி' நமீதா அறிவிப்பு! - www.tnfinds.com - Best Site in the World

கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்.. 'தலைவி' நமீதா அறிவிப்பு!

நான் கட்டாயம் அரசியலுக்கு வருவேன். அரசியல்வாதியாக மாறுவேன்.. ஆனால் எந்தக் கட்சி என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்று 'அறிவித்துள்ளார்' நமீதா. யார் யாரெல்லாமோ அரசியல் வாய்க்காலில் தொபீர் தொபீரன குதித்து மாய்ந்து மாய்ந்து சேவை புரிந்து வருகிறார்கள். அந்த வரிசையில் நமீதாவையும் ரொம்ப நாளாக மக்கள் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறார்கள். நமீதாவும், தான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் திருச்சி பக்கம் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த அவர் மறுபடியும் தான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி விட்டுப் போயுள்ளார்.

திருச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வழக்கம் போல உங்களுக்கு எப்பங்க கல்யாணம் என்று சிலர் கேட்டனர். அதற்கு அவர், இப்போது அதற்கு என்ன அவசரம் என்று பதிலுக்குக் கேட்டார். இன்னும் திருமணம் குறித்து முடிவெடுக்கவில்லையாம் நமீதா.
சரி அரசியலுக்கு எப்போது வருவீர்கள் அதையாவது சொல்லுங்களேன் என்று செய்தியாளர்கள் கேட்க, கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன். முழு நேர அரசியல்வாதியாகவம் மாறுவேன் . ஆனால் எந்தக் கட்சி என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார் நமீதா.
மோடி குறித்தும் அவர் சிலாகித்துப் பேசினார். அதாவது, மோடியின் பிரச்சாரம் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது என்றார் நமீதா.
அத வேகத்தில் ஆம் ஆத்மியையும் பாராட்டத் தவறவில்லை.. அதுகுறித்துக் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சி சாதாரண மக்களின் குரலாக ஒலிக்கிறது. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று ஆசிர்வதித்தார்..
பின்னர் அப்படியே ஒரு யு டர்ன் போட்டு விஜயகாந்த்தைப் பாராட்ட ஆரம்பித்தார்... விஜயகாந்த் அனைத்து கட்சிகளும் அவரை தேடி வருகிற அளவுக்கு பலம் வாய்ந்து இருக்கிறார் என்று சொல்லி நிறுத்தினார்...
அத்தோடு நில்லாத நமீதா, முதல்வர் ஜெயலலிதா நிறைய நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார் என்றும் பாராட்டி வைத்தார். வாவ்... நல்லதொரு அரசியல்வாதிக்கு இலக்கணமே வக்கணையாக பேசுவதுதான்.. நமீதா இப்பவே தேறிட்டாரே...!

More News Click Here............. 


 

No comments: