Thursday, January 2, 2014

தொண்டையில் ஆணி சிக்கி நான்கரை வயது சிறுவன் பலி - www.tnfinds.com - Best site in the world..

தொண்டையில் ஆணி சிக்கி நான்கரை வயது சிறுவன் பலி

தொண்டையில் இரும்பு ஆணி சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபச் சம்பவமொன்று அம்பாறையில் பதிவாகியுள்ளது.
அம்பாறை மிஹதுபுர பிரதேச வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் இரும்பு ஆணி ஒன்றை விழுங்கியுள்ளார்.
அது தொண்டையில் சிக்கியதை அடுத்து அவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நான்கரை வயதுடைய தினுல அம்புலுகல என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிற்னர்.

More Hot News Click Here...

No comments: