சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக இதுவரை 61000 முறைப்பாடுகள் பதிவு
கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 61 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அனோமா திஸநாயக்க
சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக அவசர தொலைபேசி இலக்கமான 1926 ஊடாக இதுவரை 8 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஆனால் அதில் 1000 க்கும் அதிகமானவை பொய் முறைப்பாடுகள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக எமது அதிகாரசபைநடவடிக்கைகளை எடுத்துள்ளது மேலும் பாடசாலைக்கு மாணவர்களை கூட்டிச்செல்லும் வாகனங்களுக்கு விசேட குறியீடுகளை வழங்கவும் தீர்மானித்துள்ளதுடன் ஒவ்வொரு பிரதேசத்திலும் பொலிஸ் நிலையங்களில் மாணவர்களை கூட்டிச்செல்லும் வாகனங்களை பதிவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment