அறிவியல் ஆயிரம்
விரைவில் எழுவோம்
மார்கழியில் ஓசோன் அளவு அதிகமாக உள்ளதால், காலையில் எழுவது நல்லது. மார்கழியில் மட்டுமின்றி, எப்போதுமே அதி காலையில் எழுபவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். உயரத்திற்கேற்ற உடல் எடையுடன் இருக்க அதிகாலையில் எழும் பழக்கம் உதவுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆய்வு நடை பெற்றதால் காலை 6.58க்கு எழுபவரை, அதி காலையில் எழுபவர் என்கிறது. காலை 8.45க்கு எழுபவரை, தாமதமாக எழுபவர் என்கிறது. இந்த ஆய்வு நாடுகளின் கலாசாரம் சார்ந்தும் நடைபெற வேண்டும்.
தகவல் சுரங்கம்
குளிரும் பழமொழிகள்
"ரொம்ப குளித்தால் குளிராது' என்னும் பழமொழி, தவறுகளை தொடர்ந்து செய்யும் போது குற்ற உணர்வு ஏற்படாது என்பதைக் குறிக்கிறது. "போர்த்திக் கொண்டவர்களையே காத்துக் கொண்டு இருக்கும் போக்கிடம் இல்லாத குளிரு' என்னும் பழமொழி, போர்த்த போர்த்த குளிரும். போர்த்துவதை விட்டால் குளிரும் போய் விடும் என்பதை காட்டுகிறது. "சிவன் ராத்திரியோடு குளிர் சிவ சிவ என போய் விடும்' என்னும் பழமொழி, மாசி சிவராத்திரி வரை குளிரும் என்பதைக் காட்டுகிறது. "குளிர் விட்டுப் போனது' என்ற வாசகம், பயம் விட்டுப் போனதைக் காட்டுகிறது.
No comments:
Post a Comment