கலெக்டர் ஆபீஸில் 'கக்கா' போவோம்... மாணவர் இயக்கத்தின் அதிரடி அறிவிப்பால் சலசலப்பு!
திருச்சி: திருச்சியில் உள்ள அம்பேத்கர் ஆதி திராவிடர் மாணவர் விடுதியை சுத்தப்படுத்தாவிட்டால் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் மலம் கழிக்கும் நூதனப் போராட்டத்தை புரட்சிகர மாணவர் இயக்கம் அறிவித்து மாவட்ட நிர்வாகத்தையும், மாகநகராட்சியையும் பீதி அடைய வைத்து விட்டது.
இதையடுத்து மாநகராட்சி துப்புறவுத் தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக மாணவர் விடுதையை சுத்தப்படுத்தும் பணியில் குதித்தனர். இதனால் மலம் கழிக்கும் போராட்டம் தள்ளிப் போனது. கலெக்டர் அலுவலக ஊழியர்களும் டென்ஷன் குறைந்து காணப்பட்டனர்.
இந்த மாணவர் விடுதியில் கடந்த 3 வருடமாகவே கழிப்பிட வசதியில்லையாம். இதனால் திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர் மாணவர்கள். மேலும் சாப்பாடும் சரியில்லை. சாப்பாட்டில் புழு மிதக்கும் கொடுமையான நிலையில் மாணவர்கள் இருந்து வருகின்றனராம்.
இந்த நிலையில்தான் செழியன் தலைமையிலான புரட்சிகர மாணவர் இயக்கத்தினர் அதிரடி போராட்டத்தை அறிவித்தனர். மேலும் நகர் முழுவதும் போஸ்டர்களையும் அடித்து ஒட்டினர். இதைப் பார்த்து பயந்து போன மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மாணவர் விடுதியை சரி செய்யும் பணியில் குதித்தது.
அதிகார வர்க்கத்தை வேலை பார்க்க வைக்க எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது பாருங்கள்..!
No comments:
Post a Comment