Tuesday, January 7, 2014

ஏகே 47 துப்பாக்கியும், லாஞ்சரும் கொடுங்க.. தூக்கிரலாம்... 'சன்னி'க்கு டோணி அதிரடி பதில்! - www.tnfinds.com - Best site in the world...


ஏகே 47 துப்பாக்கியும், லாஞ்சரும் கொடுங்க.. தூக்கிரலாம்... 'சன்னி'க்கு டோணி அதிரடி பதில்!

கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஆடிய இந்திய அணிக்கு வெற்றி பெற வேண்டும் என்ற வெறியே இல்லை என்று விமர்சித்த முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கருக்கு முகத்தில் அடித்தாற் போல பதிலளித்துள்ளார் கேப்டன் டோணி.

 தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் டெஸ்ட் தொடரை பறி கொடுத்த இந்திய அணியின் ஆட்டத் திறனை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார் கவாஸ்கர். இந்திய அணியினரிடம் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி இல்லை. கில்லர் இன்ஸ்டிங்க்ட் இல்லை என்று கூறியிருந்தார். 

அதற்குத்தான் இப்படி நக்கலாக போட்டுத் தாக்கியுள்ளார் டோணி.

கொல்கத்தாவில் 'கும்மாங்' பதில்.


கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தபோது கவாஸ்கரின் விமர்சனம் குறித்துக் கேட்டபோதுதான் இப்படிப் பதிலளித்தார் டோணி.

அதைக் கொடுங்க...வேறென்ன சொல்ல!

கவாஸ்கர் இப்படிச் சொல்லிட்டாரே.. நீங்க என்ன சொல்றீங்க என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பேசாமல், கையில் ஒரு ஏ.கே. 47 துப்பாக்கியும், அதில் கிரேனெட் லாஞ்சரையும் பொருத்தி எடுத்துச் செல்ல வேண்டியதுதான் என்று சிரித்தபடி கூறினார் டோணி.

போன மாதமே கையில் தூக்கிய துப்பாக்கி.

கடந்த மாதம்தான் இந்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது டோணி ஏ.கே. 47 துப்பாக்கியை தொட்டுப் பார்த்து ரசித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன என்பது நினைவிருக்கலாம்.

இரண்டு தொடரிலும் தோற்றதால் 'சன்னி'க்குக் கோபம்.

சன்னி என்று செல்லமாக அழைக்கப்படும் கவாஸ்கர், இந்தியா, தென் ஆப்பிரிக்காவுடனான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை இழந்ததால் அதிருப்தியில் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

அடுத்து நியூசிலாந்து போறோம்ப்பா.

அடுத்து இந்திய அணி, நியூசிலாந்துக்குப் போகிறது. அங்கு ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. ஜனவரி 19ம் தேதி முதல் ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது.


'கருத்து' கந்தசாமிகளுக்கு வேலை வைக்காமல் விளையாடுவார்களா?

இந்தத் தொடரிலாவது 'கருத்து' கந்தசாமிகளுக்கு வேலை வைக்காத வகையில் சிறப்பாக விளையாடுவார்களா டோணி அன் கோ...























No comments: